பொரள்ளை பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (09) இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அந்த அதிகாரி மெகசின் சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள விகாரைக்கு சென்று விட்டு திரும்பும் போது இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றும் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
எவ்வாறாயினும் தாக்குதலுக்கான காரணமோ அல்லது சந்தேகநபர் குறித்தோ எதுவித தகவல்களும் இதுவரை இல்லை.
தாக்குதலுக்குள்ளான சிறைச்சாலை அதிகாரி வெட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.