பஸ் - டிப்பர் மோதி மூவர் பலி: 16 பேர் காயம்



கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த  பஸ், டிப்பர் வாகனத்தில் மோதி 3 ​பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், எம்பிலிபிட்டிய மற்றும் உடவளவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாக செவனகல பொலிஸார் கூறினர்.
உடவளவ நீர்த்தேக்கத்தின் மதகு உடைந்தமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.