மட்டக்களப்பிலுள்ள 4 வைத்தியசாலைகளில் கமெரா பொருத்த ஏற்பாடு



மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  04 வைத்தியசாலைகளுக்கு சி.சி.ரி.வி;. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்;, 5.22 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,  இன்று புதன்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் செங்கலடி மாவட்ட வைத்தியசாலை, வாழைச்;சேனை ஆதார வைத்தியசாலை, மீராவோடை மாவட்ட வைத்தியசாலை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிலேயே கமெராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தின்போது, வைத்தியசாலைகளில் இடம்பெற்ற பல சம்பவங்களினால்; எழுந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வைத்தியசாலைகளில் கமெராக்களை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் முறைப்பாடுகளுடன் கூடிய பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்கு  கமெராக்கள் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.