ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தாஹாம் சிறிசேனவின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து வி.ஐ.பி பாதுகாப்பாளர்களும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7ஆம் திகதி கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியிலுள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் பிரபல அரசியல்வாதியின் மகன் அடங்கிய குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாஹாம் சிறிசேனவுடன் இருந்த அனைத்து பாதுகாப்பாளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

