அடுத்த வாரம் ஆகும் போது தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுடனான உடன்படிக்கை கைச்சாத்தாகி முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சக வீரர்களுக்கான உடன்படிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் இறுதி வரை இடம்பெறவுள்ளது. சுமார் 100 விளையாட்டு வீரர்கள் இவ்வாறு கிரிக்கெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

