மாதிரிக் கிராமம்



(அஷ்ரப் ஏ சமத்)

நாடு முழுவதிலும் 200 கம்உதாவ வீடமைப்புக் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தில் ஹம்பாந்தோட்டையின்  திஸ்ஸமகாரமவில்  விகாரமாகாதேவி புர  37வது மாதிரிக் கிராமம் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் திருமதி சஜித் பிரேமதாசா, மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சா் திலிப் வேதாஆராச்சியும் கலந்து கொண்டாா்.  இவ் வீடமைப்புத்திட்டம ஹம்பாந்தோட்டையில் 10வது நகர உதா வீடமைப்புத்திட்டமாகும்.

இங்கு 25 வீடுகளும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரச காணி 10 போ்ச்சும் வழங்கப்பட்டு மக்கள் பங்களிப்புடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3 இலட்சத்து 50ஆயிரம் நிதியுதவியுடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அததுடன் உள்ளக பாதைகள், நீர், மின்சாரம் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  இவ் வைபத்தின்போது நிர்மாணித்துறையில் ஈடுபடு்ம்   500 இளைஞா் யுவதிகளுக்கு சீபா சவிய திட்டத்தின் நிர்மாண உபரணங்கள் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் 500 பேருக்கு இலவச மூக்குக் கண்னாடி வழங்கும் திட்டம். அத்துடன் வீடுகளை முற்றாக நிர்மாணிக்க வசதியற்ற குடும்பங்களுக்க சீமெந்து பக்கட்டுகளும் அமைச்சா் சஜிதினால் வழங்கி வைக்கப்பட்டது.