அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று தீப்பற்றியது



தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன, 42ம் கட்டையை அண்மித்த பகுதயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதியதையடுத்து தீப்பிடித்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவத்தனர். 

இந்த விபத்து காரணமாக மோர் வாகனத்துக்கு சேதங்கள் ஏற்பட்ட போதிலும் அதில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.