அக்கரைப்பற்று மீராவோடையில் பொதுப்பூங்கா



எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை, அக்கரைப்பற்று மீராவோடை வாவிக்கரையில் பொதுப்பூங்காவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு -03ஆம், 04ஆம் குறிச்சிகளுக்கான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.