பல்கலைக்கழக வளாகத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்



மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சடலம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த மாமரமொன்றின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நபர் மாமரத்திலிருந்து கீழே வீழ்ந்து இறந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய நபரென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.