வரியற்ற பொருட்கள் ஓரே பார்வையில்



15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள வெட் வரி திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது. 

அதேவேளை 2 வீதமாக காணப்படுகின்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்படவில்லை. 

முன்னதாக, குறித்த வரித்திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகரிக்கப்பட்ட வெட் வரி சீர் திருத்த சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் 11 வீதமாக இருந்த வெட் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை 80 இற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிகரிக்கப்பட்ட வெட் வரியில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதன்படி வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் வருமாறு, 

1. கோதுமை 

2. கோதுமை மா 

3. அரிசி 

4. சீனி 

5. பருப்பு 

6. கருவாடு 

7. டின் மீன் 

8. மாசி 

9. மசாலா தூள் வகைகள் 

10. பாண் 

11. பால் 

12. தேயிலை 

13. இறப்பர் 

14. தேங்காய் 

15. தேங்காய் எண்ணெய் 

16. தேங்காய் பால் 

17. முட்டை 

18. இறால் 

19. பழ வகை 

20. காய்கறிகள் 

21. உருளைக்கிழங்கு 

22. நெத்தலி கருவாடு 

23. சிறிய வெங்காயம் 

24. பெரிய வெங்காயம் 

25. வெள்ளைப்பூடு 

26. பயறு 

27. மிளகாய் 

28. கௌப்பி 

29. கடலை 

30. உழுந்து 

31. கொத்தமல்லி 

32. நிலக்கடலை 

33. உர வகைகள் 

34. மருந்துகள் 

35. மருந்து தயாரிப்பு இயந்திரங்கள் 

36. மருந்து தயாரிப்பு உபகரணங்கள் 

37. மருந்துப் பொதியிடல் உபகரணங்கள் 

38. ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் 

39. சக்கர நாற்காலிகள் 

40. ஊன்றுகோள் 

41. காதுகேளாதோர் கருவி 

42. கண் தெரியாதவர்களுக்கான வெள்ளை பிரம்பு 

43. பிரெயில் இயந்திரங்கள் 

44. பிரெயில் காகிதம் 

45. மூக்குகண்ணாடி 

46. மூக்குக்கண்ணாடி தயாரிப்பு பொருட்கள் 

47. வெளிநோயாளர் சேவைகள் 

48. இரத்த மாற்று சிகிச்சை 

49. நோய்களை கண்டறியும் சோதனைகள் 

50. அறுவை சிகிச்சை சேவைகள் 

51. டீசல் 

52. போக்குவரத்து சேவைகள் 

53. மண்ணெண்ணெய் 

54. பெட்ரோல் 

55. விமான எரிபொருள் 

56. உற்பத்தி வரி அறவிடப்படும் வாகனங்கள் 

57. பவுசர் 

58. விவசாய விதைகள் 

59. விவசாய செடிகள் 

60. விவசாய இயந்திரங்கள் 

61. டிராக்ட்டர்கள் 

62. நெல் அரைக்கும் இயந்திரங்கள் 

63. பேக்கரி தயாரிப்பு இயந்திரங்கள் 

64. பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் 

65. மீன்பிடி உபகரணங்கள் 

66. கிரீன்ஹவுஸ் 

67. கட்டுமான உபகரணங்கள் 

68. மின்சாரம் 

69. சூரிய மின் உற்பத்தி உபகரணங்கள் 

70. மின்வலு சேமிப்பு விளக்கு 

71. மின்வலு சேமிப்பு விளக்குக்கான உற்பத்தி பொருட்கள் 

72. கல்வி சேவைகள் 

73. நூலக சேவைகள் 

74. கணினிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் 

75. கணினி மென்பொருள் 

76. அச்சிடப்பட்ட புத்தகங்கள் 

77. விளையாட்டு உபகரணங்கள் 

78. ஆயுள் காப்புறுதி 

79. கையடக்க தொலைபேசிகள் 

80. இரத்தினக்கல், முத்து, வைரம் 

81. தங்கம், பிளாட்டினம் 

82. வீட்டுக்கான நிலம் விற்பனை