தெற்காசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகம்



ஹோமாகம – பிட்டிபன பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
NSBM பசுமை பல்கலைக்கழகத்தில் ஒரே தடவையில் 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில முடியும்.
ஜனாதிபதியினால் இந்த பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.