வீரவன்ச வீட்டில் சடலம்!! களத்தில் போலீசார்



முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை- பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் 24 வயதுடைய ஒர் இளைஞனின் சடலம் உள்ளதாக அவரது மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விமல் வீரவன்சவின் புதல்வரின் நண்பரான இந்த இளைஞன் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில்
வீட்டில் இருந்தவர்களிடமும், விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் மகனிடமும் விசாரணைகளையும் நடாத்தி வருகின்றனர்.