-(SUHAIB)-
நீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றை தாமதமின்றி வழங்குமாறு அக்கரைப்பற்றுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதான தீர்மானம்.
★★★★★★★★★★★★★★
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2016.10.12 ஆந் திகதி புதன் கிழமை காலை 10.00 மணியளவில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஜனாப்.A.L.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் மதச்சடங்குகளுடன் ஆரம்பமானது.
அந்நிகழ்வில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இணைத்தலைவருமான கௌரவ.M.S.உதுமா லெவ்வை அவர்களின் ஒருங்கிணைப்புத் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றது.
அதன் போது கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ A.L.M.நசீர் MPC அவர்களும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கௌரவ.A.L.தவம் MPC அவர்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரசன்னமாகி இருந்தனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அக்கரைப்பற்று பிராந்தியத்திலுள்ள பொது மக்களின் நலன்கருதி நீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றிற்காக விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் தாமதமின்றி உடன் நீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றை அதனுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கரைப்பற்றுக்கான DCC குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

