யாழ். பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு : விசாரணைகளை அநுராதபுரத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை



யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணைகளையும் அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யுமாறு பிவிதுறு ஹெல உறுமய சட்ட மாஅதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்த பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றமையின் ஊடாக பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதாக அந்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையினால், இந்த பொலிஸ் அதிகாரிகள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் முன்வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.