யாழ்ப்பாணம் – ரயில் நிலைய வீதியிலுள்ள வீரகேசரி பத்திரிகை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த சிலர், வீரகேசரி அலுவலகத்தின் மீது போத்தல்களை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
யாழ். குடா நாட்டில் அண்மை காலமாக ஏற்பட்டுள்ள அமைதியின்மை, இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழில் செயற்பட்டு வருகின்ற பாதாள உலக கோஷ்டியின் செயற்பாடாகவும் இது இருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

