(க.கிஷாந்தன்)
நாட்டு மக்களை மட்டுமன்றி உலக பார்வையையும் ஈர்த்து கண்ணீர் மழ்க வைத்த மீரியபெத்தை மண்சரிவு 2014.10.29 அன்று இடம்பெற்றது.
பல உயிர்களை காவுக்கொண்ட இந்த மண்சரிவில் தத்தமது வீடு வாசல்களை இழந்து தற்காலிக குடிமனைகளிலும் அனர்த்த இடர்பாடு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த மக்களுக்கு 22.10.2016 அன்று விடிவு கிடைத்துள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கான தனி வீடுகள் நீண்ட காலத்தின் பின் 22.10.2016 அன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது பயனாளிகளுக்கு 75 தனி வீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இவ் வைபவம் 22.10.2016 அன்று கொஸ்லந்தை மக்கள்தெனிய பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், ஊவா மாகாண ஆளுநர் ஜெயசிங்க, பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபயஸ்ரீ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.அரவிந்தகுமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர் உள்ளிட்ட பல அமைச்சு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடன் மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணியும் தனி வீடு அமைப்பதற்கும் வித்து இட்ட பெருமை மீரியபெத்த மக்களையே சாரும் என மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைபு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பல உயிர்களை காவுகொண்டு தத்தமது வீடு வாசல்களை இழந்த நிலையில் வாழ்ந்து வந்த கொஸ்லாநாதை மீரியாபொத்த மக்களுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பின் அமைக்கப்பட்ட தனி வீடுகளை கையளிக்கும் வைபவம் மீரியாபெத்தையில் 22.10.2016 அன்று மாலை இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
இறம்பொடை லில்லிஸ்லேண்ட் மக்களும் இயற்கை அனர்த்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எனது அமைச்சியின் ஊடாக ஆறு மாதங்களில் தனிவீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மீரியாபெத்த மக்களுக்கு கட்டியமைத்து கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் எனது அமைச்சின் கட்டி கொடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தால் கால தாமதமின்றி உரிய வேளையில் இம்மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்திருப்பேன்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எனக்கு கிடைத்த அமைச்சியினை பொறுப்பேற்றதும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா இஇன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் மற்றும் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் கலந்தாலோசித்து மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளை கட்டியமைக்க திட்டமிட்டு எனது அமைச்சின் ஊடாக தனி வீடுகளை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வகையில் மலையகத்தில் இதுவரை ஐயாயிரம் வீடுகள் இனங்கண்டு வீடுகளின் கட்டுமானப்பனிகளும் பூர்த்தியாகி வருகின்றன.
அதேவேளையில் அடுத்தவருடம் மேலும் பத்தாயிரம் வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்பு பிரதமர் ஊடாக கிடைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவிதுள்ளார்.
மீரியாபெத்த மக்களுக்கு கட்டிக் கொடுகாகப்பட்டுள்ள இந்த வீடுகளை எதிர்வரும் 29.10.2016 அன்று கையளிக்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இருந்தும் தீபாவளிக்கு முன் இந்த வீடுகளை இம்மக்களுக்கு வழங்கினால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் தீபாவளி திருநாளை கொண்டாட வாய்ப்பாக அமையும் என அமைச்சரிடம் கேட்டுகொண்டமையை ஏற்று இந்த வீடுகளை கையளித்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

