அக்கரைப்பற்று ஆலிம்நகர் கிராமசேவகர் பிரிவில் ரோயல் யூத்ஸ்



அக்கரைப்பற்று ஆலிம்நகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பறகத் நகர், ஹிளுர் நகர், பனையறுப்பான், தேமாறு போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் பலவருடங்களாக குடிநீருக்கு அல்லல்பட்ட வரலாறு நாம் எல்லோரும் அறிந்ததே.
நாட்டில் நிலவும் கோரமான வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே. அந்த மக்களின் அடிப்படைத்தேவையான குடிநீர்த்தேவையை தம்மால் முடிந்தளவு பூர்த்தி செய்துள்ளது ரோயல் யூத்ஸ். 
இன்று அம்மக்களின் காலடியில் அவர்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த செயற்றிட்டத்தில் ரோயல் யூத்ஸ் உடன் கைகோர்த்த அனைத்து உள்ளங்களுக்கும், மற்றும் தனவந்தர்களுக்கும் எமது மனம்நிறைந்த நன்றிகள்.