வெருகலிருந்து பருத்தித்துறை பஸ் சேவை



தீசான் அஹமட்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர் சாலையினால், வெருகல் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கான புதிய பஸ்சேவை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீரினால், திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு வெருகலிலிருந்து புறப்படும் பஸ், மாலை 5.30 மணிக்கு பருத்தித்துறையைச் சென்றடையும்.  பருத்தித்துறையிலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் பஸ், மாலை 6.30 மணிக்கு வெருகலை வந்தடையுமென மூதூர் டிப்போவின் முகாமையாளர் எம்.நௌபீல் தெரிவித்தார்.