இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பா குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக அவர் இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
அவ்வாறு தப்பிச் சென்றுள்ளது சுறா என்றும் கடற்றொழில் அமைச்சரின் வலைக்கு சிக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதாக எமது செய்தியாளர் கூறினார்.
மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு தொடர்பான கோப் குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

