பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்த, ´பிரிக்ஸ்´ கூட்டமைப்பின், எட்டாவது மாநாடு, கோவா மாநிலத்தின் பெனாலிம் பகுதியில் நேற்று தொடங்கியது.
இதன்படி இலங்கை, நேபாளம் போன்ற நாட்டு தலைவர்களையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கோவா சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

