(BATTI NEWS)
மட்டக்களப்பு சிவானந்த வித்யாலய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி கடந்த 3 தினங்களாக நடை பெற்று கொண்டிருக்கிறது.
இக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பல்லாயிர கணக்கான மக்கள் கண்காட்சியை கண்டுகளித்து கொண்டிருக்கின்றனர் 50% வரையான விலை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது .
இலங்கையின் சகல பாகங்களிலுமுள்ள வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி படுத்தி உள்ளனர் .
மேலும் மோட்டர் சைக்கிள் சாகச நிகழ்வுகளும் , பொது மக்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்

