மொசெம்பிக் எரிப்பொருள் தாங்கி வெடிப்பு – 73 பேர் உயிரிழப்பு



மொசெம்பிக் நாட்டில் எரிப்பொருள் கொள்கலனொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தினால் மேலும் 110 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலாவி எல்லைப் பகுதிக்கு அருகாமையில் கெபிரிடிசன்கே கிராமத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த எரிப்பொருள் கொள்கலம் வெடித்து பாரிய தீ பிளம்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.