பிரதமர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறும் அன்றைய தினம் சம்பவத்தின் முதலாவது சந்தேக நபரான பொடியப்பு பியசேனவின் சாரதியான சித்திரன் புஷ்பன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் தரப்பில் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் ஆஜராகியதுடன் சந்தேக நபரின் சார்பில் சிரேஷ்ட சடத்தரணி ஜெயந்த டயஸ் நாணயக்கார ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

