மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரது சடலம், இன்று சனிக்கிழமை (26) பிற்பகல் மீடகப்பட்டுள்ளதாகவும் மற்றய மாணவனைத் தேடும் நடவடிக்கயில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். களுவன்கேணி, புன்னக்குடா எல்லைப் பகுதியிலுள்ள சேற்றுக் குழியில் புதையுண்ட நிலையில், தேடுதலில் ஈடுபட்ட கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த 17 வயதுடைய அல்ஹர்தீன் பர்ஹான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

