நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு - மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
26.11.2016 அன்று மாலை 04.00 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியின் இருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்கறி வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

