ஒரு ஓட்டத்தால் ஜெயித்தது இலங்கை



மேற்கிந்திய அணியுடனான பரபரப்பான போட்டியில் ஓர் ஓட்டத்தினால் வென்றது இலங்கை நடைபெறும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க ஐந்தாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஓர் ஓட்டத்தினால் இலங்கை அணி வென்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களைக் குவித்தது.
நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப விரர் தனஞ்செய டி சில்வாவுடன் இணைந்து இரண்டாவது விக்கட்டில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் மூன்றாவது விக்கட்டில் மேலும் 107 ஓட்டங்களை நிரோஷன் டிக்வெல்ல பகிர்ந்தார்.
குசல் மெண்டிஸ் 73 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர்கள், 7 பவுண்ட்றிகளுடன் 94 ஓட்டங்கயும் நிரோஷன் டிக்வெல்ல 106 பந்துகளில் ஒரு சிக்சர்இ 7 பவுண்ட்றிகளுடன் 94 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் அணித் தலைவர் உப்புல் தரங்க 26 ஓட்டங்களையும் சச்சித் பத்திரண ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
331 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களையே பெற்றது.