இலங்கையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் இல்லை எ
ன்பது பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தின் மூலம் கண்டறியப்பபட்டுள்ளதாக சுகாதாரா போஷாக்கு மற்றும் சுதேஷிய வைத்தியத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார் .
ஐ.எஸ் அமைப்பில் இலங்கையைச்சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக பாராளுமன்ற கட்டதொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
புலனாய்வுப்பிரிவு இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து தேசிய பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கமைவாக அந்த அமைப்பில் எவரும் இணையவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் முஸ்லிம் மக்களின் சார்பில் தற்போது குரல் எழுப்புவோர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய புலனாய்வு பிரிவு உறுப்பினர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (ஸ)

