இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது



எதிர்ப்பு நடவடிக்கையொன்றின் இடைநடுவில் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
ஓய்வூ பெற்ற விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் சில அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடாத்துவதற்கு தயாராவதாக வெளியான செய்தியை தொடர்ந்து இடைகால தடையுத்தரவொன்றை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரிய போதிலும் அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
கோட்டை பொலிஸாரினால் கொழும்பு கோட்டை நீதவானிடம் இந்த தடையுத்தரவிற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஓய்வூ பெற்ற இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முயற்சிக்கின்றமையை தடுத்து நிறுத்துமாறு தடையுத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.