திண்ம கழிவு அகற்றல்



(க.கிஷாந்தன்)

உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் திண்ம கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் புதிய செயற்திட்டம் நுவரெலியா பிரதேச சபையினால் 03.11.2016 அன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய நடைமுறையை ஆரம்பித்து வைக்கும் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு அன்றைய தினம் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர் யூ.எச்.பத்மா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்நடைமுறை குறித்தும் அதனால் சுற்றாடலுக்கும், மக்களுக்கும் ஏற்படவுள்ள அனுகூலங்கள் தொடர்பிலும் பிரதேச மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தியதோடு, இதற்கு அணைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நுவரெலியா பிரதேச சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.