முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி, சுயாதீன விசாரணைகளை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தான் ஒருபோதும் பின்நிற்க போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் அபிவிருத்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
முறிகள் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் ஆராய்வதற்கான அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீன விசாரணைகள் மக்களின் நம்பிக்கைக்கு அமைய நடாத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

