கண்டு பிடியுங்கள்



குருநாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் சந்தேகிக்கப்படும் இரண்டாவது சந்தேகநபருடைய புகைப்படத்தை, பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம், சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தமக்கு தெரிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர் இரண்டு அடையாள அட்டைகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு அடையாள அட்டைகளின் விவரங்களையும் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஒரு அடையாள அட்டையில்,
கந்தேகெதரலாகே ஷமில மதுசங்க
பிறந்த திகதி- 30.08.1980
முகவரி- இல: 693இ கொட்டாவ – பன்னிப்பிட்டி.
தே.அ.இ: 802436939ஏ
கடவுச்சீட்டு இலக்கம் N5204998 என்றத் தகவல் காணப்படுகின்றது.
மற்றைய அடையாள அட்டையில்,
ஜாலன் கந்தம்பி சமிந்த
பிறந்த திகதி- 30.08.1981
முகவரி- இல: 693ஃ2இ குலசெவன வீதி – கொட்டாவ.
தே.அ.இ: 812431935ஏ போன்ற விபரங்கள் உள்ளன.
குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் அறியக்கிடைத்தால் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் பிரதி பொலிஸ் மாஅதிபரின் இலக்கமான 0772001021, 0112451633 மற்றும் 0112451636 ஆகிய இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.