இராணுவ சூழ்ச்சிகளை முன்னெடுத்து ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இராணுவ சூழ்ச்சிகளுக்கு இடமுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியிருந்த நிலையில், இது குறித்து ஊடகவியலாளர்கள் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஜனநாயக ரீதியில் ஆட்சி பீடத்தை பெற்றுக் கொள்ள முடியாதமையினால், தினேஷ் குணவர்தன போன்றோர் இராணுவ சூழ்ச்சிகள் தொடர்பில் கனவு காண்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

