–ஏ.எச்.ஏ. ஹுஸைன் –
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை கண்டியனாறு குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் (நொவெம்பெர் 13, 2016) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியனாறு குளத்திற்கு சனிக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்ற சில்லுக்கொடியாறு கிராமத்தைச் சேர்ந்த 12 பிள்ளைகளின் தந்தையான வீரக்குட்டி வேலாப்போடி (வயது 72) என்பவரின் சடலமே குளத்தின் சேற்றுக்குள் புதையுண்டிருந்த நிலையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

