சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளையமகளான சன்ஜீவனி இந்திரா 40 வயதில் இலண்டனில் வைத்து காலமானார்.
செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான அவர், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.
இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இரு குழந்தைகளின் தாயாவார்.

