நானும் பிறரால் சுமந்து செல்லப்படுவேன்




காலஞ்சென்ற கலாநிதி பண்டித் W.D. அமரதேவவின் பூதவுடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பூதவுடல் சுதந்திர சதுக்க வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டிருந்ததுடன், 
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கலைஞர்கள் 
உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வரலாற்றிலே இது முதன் முறையாகும்.

இசை மேதை கலாநிதி பண்டித் W.D. அமரதேவ நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் இயற்கை எய்தினார்.

முழு நாட்டையும் தனது இசையால் வசப்படுத்திய அன்னார், ஒரு சில கணப்பொழுதுகளில் இலங்கை மக்களின் இதயங்களைக் கண்ணீரால் நிரம்பச்செய்தார்.

அன்னாரது பூதவுடலைத் தாங்கிய வாகனப் பேரணி இன்று காலை பொரளையிலிருந்து சுதந்திர சதுக்கத்தைச் சென்றடைந்தது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது 88 ஆவது வயதில் காலமான கலாநிதி பண்டித் W.D. அமரதேவ இலங்கை இசை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.