மியூசியஸ் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தில் தீ பரவல்



கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தற்போது 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயினால் மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் அதிபர் எஸ் தன்தெனிய கூறினார்.