நேற்று இரவு கைது செய்யப்பட்ட அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை நீதிபதி லங்கா ஜயரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 02ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
ஜாலிய விக்ரமசூரிய நாட்டில் இருந்து வௌியேற முற்பட்டிருந்த வேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று இரவு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாலிய விக்ரமசூரிய, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக பதவியில் இருந்த காலத்தில், தூதுவராலயத்திற்கான கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 32,000 அமெரிக்க டொலர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

