32 இலங்கையர்கள் ஐ.எஸ். அமைப்பில்




இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

அத்துடன், இன்று முதல் இனவாத அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார். 

சில இணையத்தளங்கள் ஊடாக உண்மையற்ற மற்றும் அடிப்படைவாத செய்திகளை வௌியிடுவதாகவும், இதனால மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். 

அத்துடன் நாட்டில் வௌிநாட்டு புலனாய்வு செவைகள் சில இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செய்திகளை வௌியிடும் லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர என்பவரை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ கூறினார்.