வாகனங்களின் விலை மாற்ற விபரம்



2017 வரவு செலவுத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சிறிய ரக வாகனங்களின் விலை அதிகரிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 1800 CC மற்றும் 2000 CC க்கு இடைப்பட்ட வாகனங்களின் விலை 9 இலட்சத்தால் அதிகரிப்படுவதாகவும் 1000 CC க்கு குறைந்த வாகனங்களில் விலை 2 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கும் எனவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலத்திரனியல் வாகனங்களுக்கான சுங்க வரி இம்முறை வரவு செலவுத்திட்டம் மூலம் குறைக்கப்பட்டுள்ளதால் அவ்வாகனங்களின் விலை சுமார் 5 இலட்சம் ரூபாவால் குறைவடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 1000CC முதல் 1800CC வரையான வாகனங்கள் மற்றும் 2000CC க்கு அதிகமான வாகனங்களின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை முச்சக்கர வண்டிகளின் விலை சுமார் 50,000 ரூபாவால் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது