G.S.P சலுகையைப் பெறுவதற்காக அமுலில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சம்மாந்துறையில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை எஸ்.எல்.ரி.ஜே. எனும் முஸ்லிம் அமைப்பு வழிநடத்தியது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாகவும், அதை தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதன்போத, “இலங்கை அரசே! இலங்கை அரசே! கைவைக்காதே கைவைக்காதே முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே!” அரசியல் யாப்பு உறுதிப்படுத்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே!இ எச்சரிக்கை! எச்சரிக்கை! நல்லாட்சியே எச்சரிக்கை! முஸ்லிம் உரிமையில் மூக்கை நுழைக்கும் நல்லாட்சியே எச்சரிக்கை! எங்கள் உரிமையை பறிக்க நினைத்தால் எழுந்து நிற்போம் இமய மலையாய்! ஆர்ப்பரிப்போம் கடலலையாய்! மஹிந்தவை வீழ்த்தியது போன்று மைத்திரி ஆட்சிக்கும் முடிவு கட்டுவோம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகள் ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

