இதழியல் டிப்ளோமா -சான்றிதழ்கள் வழங்கல்



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. 

ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மண்டபத்தில் திரு தே.தேவானந்த் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். 

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு ராஜவிசாகன், ஊடகக்கற்கைகள் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி சுதாகர் மற்றும் பரீட்சைகள் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் க. ஞானபாஸ்கரன் ஆகியோரும் ஊடகவியளாலர்கள் பொதுமக்கள் என்ப்பலரும் இதில் கலந்து கொண்டனர். 

இதழியல் டிப்ளோமா பயிற்சிநெறியை நிறைவு செய்த ஐந்தாம் மற்றும் ஆறாம் பிரிவு முழுநேர மாணவர்கள் 15 பேர் மற்றும் 3 அணி பகுதிநேர மாணவர்கள் இருவர் உட்பட 16 பேர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.