சுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா ரிகாடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கழிவு தேயிலை தூள் அனுமதி பத்திரம் இல்லாமல் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை பகுதியிலிருந்து மஸ்கெலியா கிலண்டில் தோட்ட களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லும் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபர்களையும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

