சாய்ந்தமருதில் இடம்பெற்ற மின்னொளியிலான கிங் ஹோர்ஸெஸ் அணியின் 4 வருட பூர்த்தியை முன்னிட்டு கிங் ஹோர்ஸெஸ் வெற்றிக்கிண்ணம்-2016 அணிக்கு 7 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ஏ.முகமட் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மொத்தமாக 48 அணிகள் பங்குபற்றின கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற இப்போட்டியில் அரை இறுதிப்போட்டிக்கு சிறந்த நான்கு அணிகள் உள்வாங்கப்பட்டன.
இதில் இறுதி போட்டிக்கு சாய்ந்தமருது லம்ப்கோ(lampco) விளையாட்டுக்கழகம் அணியும் அக்கரைப்பற்று நோநேம்(no name) விளையாட்டுக்கழகம் அணியும் ஒன்றை ஒன்று எதிர்தாடியது.
இப்போட்டியில் நாணய சுழட்ச்சியில் வெற்றிபெற்ற அக்கரைப்பற்று நோநேம்
(no name) விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய மட்டுபடுத்தப்பட்ட 5 ஓவர்கள் 4 விக்கெட் இழப்புக்கு முடிவில் 45 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுபெடுத்தாடிய சாய்ந்தமருது லம்ப்கோ(lampco) விளையாட்டுக்கழகம் ஆரம்பத்தில் அதிகமாக ஓட்டங்களை பெற்றாலும் கடைசி நிமிடத்தில் தவறவிட்டது. கடைசியில் 4 ஓட்டங்களால் அக்கரைப்பற்று நோநேம்(no name) விளையாட்டுக்கழகம் மின்னொளியிலான கிங் ஹோர்ஸெஸ் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்தது.
இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு பூரண அனுசரணை வழங்கிய கட்டார் மண்ணின் பிரபல தொழிலதிபர் GTC நிறுவன உரிமையாளர் எம்.பஷ்மீர் அவர்கள் என்பது குறிப்பிட தக்கது

