இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு இலங்கை தனியார் பஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.
வழமைப் போன்று நாளை பஸ்கள் சேவையில் ஈடுபடும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிதியமைச்சருடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், நாளை தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீதி ஒழுங்குகளை மீறும் வாகனங்களிடம் அறவிடும் குறைந்த பட்ச அபராத தொகையை 2, 500 ரூபா வரை உயர்த்துவதற்கான வரவு செலவுத்திட்ட முன் மொழிவுக்கு எதிராக நாடாளவிய ரீதியில் தனியார் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தனர்.

