பொலிதீன் பாவணையை முற்றாக ஒழிப்போம்



பொலிதீன் பாவணையை முற்றாக ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி ஆசிரிய பயிலுனர் மாணவர்களின் விழிப்புனர்வு ஊர்வலம் சனிக்கிழமை (12.11.2016) மட்டக்களப்பு தாழங்குடா மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் சமூக விஞ்ஞானப்பிரிவின் ஏற்பாட்டில் சுற்றாடல் பாதுகாப்புச் செயற் திட்டத்தின் கீழ் பொலிதீன் பாவணையை முற்றாக ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் இந்த விழிப்புனர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் ஆரம்பமாகி ஆரையம்பதி பொதுச் சந்ததை வரை சென்று மீண்டும் கல்லூரி முன்றளில் நிறைவு பெற்றது.


இதில் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஏ.ராஜேந்திரா உட்பட உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், காத்தான்குடி பொலிசார் மற்றும் கோவில்குளம் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர், கல்லூரி ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுற்றாடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பொலிதீன் பாவணையை முற்றாக ஒழிப்போம் என இந்த விழிப்புனர்வு ஊர்வலத்தின் போது வலியுறுத்தப்பட்டது.