இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகம்



இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
25 வருட காலத்திற்கும் அதிகமான காலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய இவர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக செலிஸ்டர் ஜெனரல் பதவி வகித்த போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய டில்ரூக்ஷி விக்ரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பதவியை இராஜிணாமா செய்திருந்த நிலையில், ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த சுனேத்ரா ஜயசிங்க அதனை பொறுப்பை இன்று வரை ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.