அரசாங்கத்தினால் ஊடகங்கள் அடக்கப்படுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற சீர்த்திருத்தம் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஊடகங்கள் தனியாக தாக்குதல் நடாத்துகின்றன என்றால், தம்மாலும் தாக்குதல் நடாத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடாத்தினால், தாக்குதல் நடாத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடத்தல்கள் இடம்பெறாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

