ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு



மோசடி ஊழல் முறைகேடு தொடர்பான விடயங்களை எவ்வாறு செய்தியிடல் என்பது தொடர்பிலான விசேட ஊடகவியலாளர் செயலமர்வொன்று அரச தகவல் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த செயலமர்வை சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி , இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான புலனாய்வு விசாரணை பிரிவும் தகவல் துறை அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
அமைச்சர்களான சாகல ரத்னாயக்க , கயந்த கருணாதிலக பிரதி ,அமைச்சர் கருணாசேன பரணவிதான உள்ளிட்டோர் இந்த செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.