ஓய்வு நிலைப் பேராசிரியர் மௌனகுருவிற்கு கௌரவம்



விங்ஸ் 2016 – நம்பிக்கையின் சிறகசைப்பு” கலை விழாவின் நிறைவு நிகழ்வு(13) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை கலைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இலங்கை கெயார் நிறுவனம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் இந்த கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண முன்னாள் பேராசிரியர் சி.மௌனகுரு இவ் விழாவில் நினைவுக் கிண்ணம் பெற்றமை சிறப்பம்சமாகும்…