அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்: யாருக்குக் கவலை, யாருக்கு மகிழ்ச்சி



குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-வது அதிபராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
நேற்று வெளியான அமெரிக்க தேர்தல் முடிவுகள் பலருக்கும் மகிழ்ச்சியளித்தாலும், வேறு பல மில்லியன் மக்களைக் கவலையுறவும் செய்துள்ளது.
டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்கடொனால்ட் டிரம்ப் வெற்றிக்கான ஐந்து காரணங்கள்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் போது பலனடைவது யார்? இழப்பது யார்?
பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார உரைகளை வைத்து அவரின் கருத்துக்கள், கொள்கைகள் என்னவென்பதை நாம் சற்று தெரிந்து கொள்ளலாம். மேலும், இவை துணை அதிபராகவுள்ள ப்ரொடெஸ்டண்ட் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவரும், இந்தியானா மாநில ஆளுநருமான மைக் பென்சின் கருத்துக்களாகவும் கருதப்படுகிறது.
பெண்கள்
தங்கள் நாட்டின் முதல் பெண் அதிபரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்ற கேள்வி நிலவியதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் , நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், பாலினம் என்ற அம்சம் ஒரு முக்கிய அங்கம் வகித்தது.
பெண்கள் மீது அடக்குமுறை பிரயோகித்தவர் என்று டொனால்ட் டிரம்பின் மீது நிலவி வந்த விமர்சனத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.

பெண்களைக் குறைவாக எடை போடுபவர், இழிவுபடுத்தியவர் மற்றும் தாக்கியவர் என்று டிரம்ப் மீது 30 ஆண்டு குற்றச்சாட்டு உள்ளது வரலாறு என்று தெரிவித்த ஹிலரி, பெண்களைக் கொடுமைப்படுத்துபவர் என்று டிரம்ப் குறித்து விவரித்து குறிப்பிடத்தக்கது.